இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
17வது ஆண்டு எடிசன் திரைப்பட விருதுகள் ஏப்ரல் மாதம் மலேசியாவில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு பினாங்கு லைட் ஓட்டலில் நடந்தது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் சதீஷ், பினாங்கு மாநில அமைச்சர் டத்தோஸ்ரீ சுந்தர்ராஜு, ஆட்சி குழு உறுப்பினர் குமரன், பினாங்கு மாநில மேயர் டத்தோ ராஜேந்திரன், டத்தோ பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சதீஷ் பேசுகையில், ‛‛சினிமாவை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அவர் பெயரில் விருது வழங்க வேண்டும் என எண்ணம் தோன்றியது செல்வகுமாரையே சாரும். கடத்த 16 ஆண்டுகளாக பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், என சினிமா துறைக்கு தொடர்ந்து விருது வழங்கிய ஊக்குவித்து வருகிறார்'' என்றார்.
தொடர்ந்து இந்த விருது நிகழ்வில் போட்டியிடும் பல்வேறு படங்கள், திரைப்பிரபலங்களுக்கு ஓட்டளிக்கும் நிகழ்வும் ஆன்லைனில் துவங்கியது. சதீஷ் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஓட்டளித்தனர்.
ஏப்ரல் ஐந்தாம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்பைஸ் அரேனா அரங்கில் எடிசன் திரை விருதுகள் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் முதன் முறையாக பினாங்கில் நடக்கவிருக்கும் எடிசன் பிலிம் பெஸ்டிவலில் அமரன், மகாராஜா, விடுதலை 2, மெய்யழகன், லப்பர் பந்து ஆகிய 5 படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் எடிசன் திரை விருது ரசிகர்களுக்கு தங்களுக்கு பிடித்தமான நடிகரின் படம் போட்ட டி-ஷர்டையும் (T-Shirt) விற்பனை செய்ய உள்ளதாக செல்வகுமார் தெரிவித்தார்.