லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
யு-டியூப் மற்றும் சிறிய சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த விமல் குமாரின் நடிப்பு கனவை நனவாக்கியது எதிர்நீச்சல் தொடர் தான். அவரும் அந்த தொடரில் கரிகாலன் என்கிற கதாபாத்திரத்தில் மிகவும் சூப்பராக பெர்பார்மன்ஸ் செய்து மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சின்னத்திரை விருதுகள் நிகழ்வில் விமல் குமாரை கவுரவித்துள்ளனர். அப்போது மேடையில் பேசிய விமல் குமார், 'வாசிப்பு தான் விமல் குமாரை கரிகாலனாக்கியது. வாசிப்பு தான் என் குறிக்கோளை அடைய உதவியது. ஜெய மோகன், தால்ஸ்த்தாய் எழுத்தாளர்களின் கதாபாத்திரங்கள் என்னை பல இரவுகள் தூங்க விடாமல் செய்தது' என்று கூறியுள்ளார்.