அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மலையாள சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ரேகா கிருஷ்ணப்பா தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், ஒரு நடிகையாக அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது தெய்வமகள் நெடுந்தொடர் தான். அதில் ரேகா கிருஷ்ணப்பா ஏற்று நடித்திருந்த அண்ணியார் கதாபாத்திரத்தை வைத்து, ரசிகர்கள் இன்றளவும் இவரை திரையில் பார்த்தால் அண்ணியாரே என்று தான் அழைக்கிறார்கள். அதன்பிறகு ரேகா கிருஷ்ணப்பா தமிழில் சில ஹிட் தொடர்களில் நடித்தாலும் தெய்வமகள் அளவுக்கு பெயர் கிடைக்கவில்லை. இதனால் சீரியலுக்கு குட் பை சொல்லிவிட்டு மீண்டும் சினிமா பக்கம் சென்ற ரேகா, 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டாராம்.
இந்நிலையில், அண்மையில் பேட்டி அளித்த ரேகா கிருஷ்ணப்பா, சீரியலை விட்டு விலகியது ஏன்? என்ற கேள்விக்கு, 'சீரியலில் எனக்கு வரும் கேரக்டர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே மாதிரியாக இருந்தது. அதனால் தான் வேண்டாம் என்று இருந்துவிட்டேன். இப்போது மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.