இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி கல்யாணம் முதல் காதல் வரை என்கிற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பிறகு யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக கலக்கிய அவர், தற்போது கயல் என்கிற சூப்பர் ஹிட் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது தமிழ் சின்னத்திரை நடிகைகளில் டாப் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ள சைத்ரா ரெட்டி, நடிகையாக 10 வருடங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ள சைத்ரா, 'இந்த துறையில் எனது 10 வருட பயணத்தை திரும்பி பார்க்கும் போது என் இதயம் மிகுந்த நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் நிறைந்துள்ளது. 19 வயதில் இந்த பயணத்தை தொடங்கினேன். படிப்படியாக உங்கள் அன்பு என்னை இங்கே கொண்டு வந்துள்ளது. இந்த கனவை அழகாக நனவாக்கிய அனைவருக்கும் என் இதயத்தில் ஆழத்திலிருந்து நன்றி' என அந்த பதிவில் கூறியுள்ளார். சைத்ராவின் இந்த சாதனை பயணத்திற்கு சக நடிகர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகள் குவித்து வருகின்றனர்.