லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சின்னத்திரை நடிகைகளான சைத்ரா ரெட்டியும், நக்ஷத்திராவும் ஜீ தமிழின் யாரடி நீ மோகினி தொடரில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இருவரும் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர். சைத்ரா தற்போது கயல் தொடரில் நடித்து வருகிறார். நக்ஷத்திராவுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதால் சீரியல் எதிலும் கமிட்டாகவில்லை. இந்நிலையில், தோழியை காணச் சென்ற சைத்ரா ரெட்டி நக்ஷத்திராவின் கர்ப்பமான வயிறை முத்தமிட்டும், கட்டி அணைத்தும் தன் பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த புகைப்படங்களானது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இருவரின் நட்பையும் ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.