100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இருப்பினும் இந்த தொடர் ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளாகவே முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், தொடரின் நாயகன் சமீர் அகமது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசியுள்ளார்.
அப்போது, 'தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியல் முடிவுக்கு வருகிறது. அதற்கு காரணம் டிஆர்பியாக கூட இருக்கலாம். கடந்த ஷூட்டிங்கின் போதே சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்று எங்களுக்கு தெரிந்து விட்டது. நாங்கள் மனதளவில் அதற்கு தயாராகிவிட்டோம். சில ரசிகர்கள் சீரியல் முடியப் போவதை குறித்து கொஞ்சம் கூட வருத்தப்படவில்லையே என்று கேட்கிறீர்கள். எல்லோருடைய வாழ்விலும் ஒரு திருப்பம் வரத்தான் செய்யும். அது சந்தோஷமாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் சில மாற்றம் வரும் அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்' என்று கூறியுள்ளார்.