குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் |
நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கும் அவருடைய மாமா கார்த்திக்கிற்கும் கடந்த வாரம் கோலாகலமாக திருமணம் நடந்தது. இதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலர் மோசமாக கமெண்ட் செய்துள்ளனர். இதனையடுத்து இதற்கு பதிலளித்த ரோபோ சங்கர், ‛ஆரம்பத்தில் நான் எவ்வளவு வலி வேதனையோடு போராடி வெற்றி பெற்றேன். .என்னுடைய உழைப்பால் தான் நான் இன்று இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறேன். நான் என் வாழ்க்கையை என்ஜாய் செய்கிறேன். ஒரே பொண்ணு அவ கல்யாணத்தை எனக்கு பிடித்தவாறு நடத்துகிறேன். இவ்வளவு செய்கிறார்கள் ஆனால், ஒரு வருஷத்தில் பிரிந்து போய்விடுவார்கள் என்று சொல்கிறார்கள்' என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.
அதன்பின் பேசிய ரோபோ சங்கரின் மருமகன், 'நாங்கள் உழைத்த பணத்தை வைத்து என்ஜாய் செய்கிறோம். அதில் சிலருக்கு என்ன கஷ்டம் வந்தது என்று தெரியவில்லை. சிலர் பொறாமையினால் தான் தப்பு தப்பா கமெண்ட் போடுறாங்க' என்று பேசியுள்ளார்.