மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
நடிகர் ரோபோ சங்கர் நேற்று(செப்., 18) இரவு காலமானார். சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜொலித்த ரோபோ சங்கர், 46. சினிமாவிலும் காமெடி நடிகராக உயர்ந்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர், மஞ்சள்காமாலை நோயால் பாதித்து அதிலிருந்து மீண்டு வந்தார். மீண்டும் படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்நிலையில் சில தினங்களாக உணவுக்குழாய் மற்றும் குடல் பிரச்னையால் பாதித்த இவர், நேற்று இரவு பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரோபோ சங்கர் உடல் அஞ்சலிக்காக சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 3 மணிக்கு மேல் அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
அரசியல் தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்
முதல்வர் ஸ்டாலின்
"திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவு செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி
திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, சின்னத்திரையில் சாதித்து, திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள், கலையுலகினர், ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தோம்.
மத்திய அமைச்சர் எல் முருகன்
சின்னத் திரையிலிருந்து வளர்ந்து, தமிழ் சினிமாவில் தனது தனித்துவமிக்க நகைச்சுவை திறன் மூலமாகவும், குணச்சித்திர வேடங்களின் மூலமாகவும் புகழ்பெற்ற நடிகராகத் திகழ்ந்த நடிகர் 'ரோபோ' சங்கர் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் வாடுகின்ற அவரது குடும்பத்தார் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். ஓம் சாந்தி..!
அதிமுக., எடப்பாடி பழனிசாமி
பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான ரோபோ ஷங்கர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் ரோபோ சங்கரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
பா.ஜ., தமிழிசை சவுந்தர்ராஜன்
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் ரோபோ சங்கர் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத் துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பா.ஜ., நயினார் நாகேந்திரன்
நடிகர் ரோபோ சங்கர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை திறனால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவலையில் இருந்து மீட்டவர். இவரது மறைவு, திரையுலகிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!
கமல்ஹாசன்
ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன், ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே.
விஜய்
நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்;தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர்; அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.
சிம்பு
நடிகர் ரோபோ சங்கர் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்.
ராகவா லாரன்ஸ்
ரோபோ சங்கரின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். பொழுதுபோக்கிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுக்கூறப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
யோகிபாபு
ஆருயிர் நண்பர், நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் திடீர் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்த்தி
காலப்போக்கில் ஏற்படும் அழிவுகரமான தேர்வுகள் ஆரோக்கியத்தை எவ்வாறு சிதைக்கின்றன என்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஒரு சிறந்த திறமை மிக்க ரோபோ சங்கர் விரைவில் போய்விட்டார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
பிரியா பவானி சங்கர்
நீ இப்படி போய் இருக்கக் கூடாது, ரோபோ நா. நீ இன்னும் இங்கேயே இருந்திருக்கணும். சிலரின் இழப்புகள் உன்னை வருத்தப்படுத்துவது மட்டுமல்ல - அவை உன்னை கோபப்படுத்தவும் செய்யும். குட் பாய் ரோபோசங்கர்.
விஷ்ணு விஷால்
என் படங்களில் மிகவும் பிரபலமான நகைச்சுவை காட்சியாக இது(வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் பட காமெடி) இருக்கலாம். அவர் இல்லாமல், இது இவ்வளவு மறக்க முடியாததாக இருந்திருக்காது. சாந்தியடையுங்கள், ரோபோஷங்கர். தமிழ் சினிமா உங்களைப் போன்ற ஒரு திறமையாளரை நிச்சயமாக இழக்கும்...
குஷ்பு
மிக இளம் வயதில் விரைவில் போய்விட்டார் ரோபோசங்கர். நீங்கள் ஒரு அற்புதமான மனிதர். உங்கள் நன்மை நினைவுகூரப்படும். உங்களை இழப்பது வேதனையாக இருக்கும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி.
ரவி மோகன்
ரோபோ சங்கர் சகோதரரின் அகால மறைவால் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உண்மையிலேயே ஒரு அற்புதமான திறமை உடையவர் ஆன்மா மிக விரைவில் பறிக்கப்பட்டது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுல்யா ரவி
ரோபோ சங்கர் அண்ணாவின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். சினிமாவிற்கும், அவரது நகைச்சுவைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் போற்றப்படும். ரோபோ சங்கர் அண்ணா.
ராதிகா சரத்குமார்
ரோபோ சங்கர் எப்போதும் தனது நகைச்சுவை உணர்வால் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். மேலும் தனது சிறந்ததை வழங்க மிகவும் கடினமாக உழைப்பவர். இது ஒரு பெரிய இழப்பு. குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வலிமையாக இருக்க எனது பிரார்த்தனைகள்.