ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை நேஹா மேனன். இவர் சென்ற வருடம் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளின் போது சென்னை அணியின் வீரரான மகேஷ் பத்திரணாவின் போஸ்ட்டுகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இதனையடுத்து இருவரும் காதலிப்பதாக சென்ற வருடத்திலேயே செய்திகள் வெளியானது. இந்த வருடமும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடங்கிவிட்ட நிலையில் நேஹா மேனன் - பத்திரணா காதல் கதையும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
இதுகுறித்து தற்போது நேஹா மேனன் மனம் திறந்து விளக்கமளித்துள்ளார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'எனக்கு கிரிக்கெட் பார்க்கக் கூட தெரியாது. யாராவது உடனிருந்தால் பார்த்தால் பார்ப்பேன். அப்படி ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் பார்த்த போது பத்திரணா குறித்து அருகில் இருந்தவர் கூறினார். அதன்பிறகு தான் பத்திரணா குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்தேன். இந்த கிசு கிசு அப்போது எனக்கு ஜாலியாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன். மற்றபடி நான் பத்திரணாவை பார்த்தது கூட கிடையாது' என்று கூறியுள்ளார்.