மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
சின்னத்திரையில் கஸ்தூரி, தங்கம், வாணி ராணி, தாலாட்டு உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 2019ம் ஆண்டு அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு சித்தாரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், ஸ்ரீதேவி தான் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் இனிய செய்தியை போட்டோஷூட் புகைப்படங்களுடன் அறிவித்திருந்தார். தற்போது அவருக்கு 5 வது மாதத்தில் நடைபெறும் பூச்சூட்டல் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்நிகழ்ச்சியின் போது கணவர் மற்றும் குழந்தையுடன் க்யூட்டாக நடனமாடியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதைபார்க்கும் ரசிகர்கள் ஸ்ரீதேவிக்கு இரண்டாவது பிரசவமும் நல்லபடியாக நடைபெற வேண்டுமென பிரார்த்தனையுடன் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.