ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தமிழ் சின்னத்திரையில் வரும் சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை புனைவு மற்றும் அபுனைவு என வகைப்படுத்தி அதில் மிகவும் பிரபலமான நபர் அல்லது கதாபாத்திரம் எது என்பதை ஆர்மாக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் அதிகம் பிரபலமான டாப் 10 சீரியல் கதாபாத்திரங்கள் எவை என்பதை ஆர்மாக்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், முதலிடத்தில் கயல் சீரியல் கயல், இரண்டாம் இடத்தில் பாக்கியலெட்சுமி சீரியல் பாக்கியலெட்சுமி, மூன்றாம் இடத்தில் சுந்தரி சீரியல் சுந்தரி, நான்காம் இடத்தில் ‛எதிர்நீச்சல்' ஜனனி, ஐந்தாம் இடத்தில் இனியா சீரியல் இனியா, 6ம் இடத்தில் ‛எதிர்நீச்சல்' ஆதி குணசேகரன், 7ம் இடத்தில் கார்த்திகை தீபம் கார்த்திக், 8ம் இடத்தில் சிறகடிக்க ஆசை முத்துக்குமார், 9ம் இடத்தில் ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம், 10ம் இடத்தில் சிறகடிக்க ஆசை ‛மீனா' ஆகிய கதாபாத்திரங்கள் இடம் பிடித்துள்ளன. இதனையடுத்து இந்த கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.