ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தொலைக்காட்சியில் பிரபலமாகும் பலருக்கும் தற்போது சினிமா கதவு எளிதாக திறந்து விடுகிறது. பல சீரியல் நடிகைகளும், நடிகர்களும் தமிழ் சினிமாவில் தங்களது வளர்ச்சியை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஈரமான ரோஜாவே-2 சீரியலில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்த ஸ்வாதி கொண்டேவும் இணைந்துள்ளார்.
இவர் நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியான நிலையில், தற்போது விஷன் டைம் யூ-டியூப் சேனலில் வெளியாகவுள்ள ஆராதனா என்கிற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதேபோல் ஜீ தமிழ் சீரியல்களில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் புவியரசு தான் இந்த வெப் சீரிஸில் ஸ்வாதி கொண்டேவுக்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போது ஆராதனா வெப் சீரிஸின் பர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும் நிலையில் புவியரசுக்கும், ஸ்வாதிக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.