ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் ஹேமா என்ட்ரி கொடுத்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் முதல்நாளே அடி வாங்கி விட்டதாக ஹேமா வீடியோ வெளியிட்டுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் தனது முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் பற்றி கூறியுள்ள அவர், 'முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் வித்தியாசம் காண்பிக்க வேண்டும் என்பதால் ஹேர் ஸ்டைலில் சின்ன மாற்றம் செய்துள்ளேன். ரொம்ப வருடம் கழித்து சீரியலில் சுடிதார் போட்டு நடிக்கிறேன். முதல் நாளே என் அப்பாவிடம் அடி வாங்குவது போல் காட்சி எடுக்கப்பட்டது. அதில், என் அப்பா கேரக்டர் கையால் முதல் நாளே சரியான அடி வாங்கி விட்டேன்' என்று கூறியுள்ளார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. இரண்டாம் பாகத்திற்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன் எனவும் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.