பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகை ஹேமா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் சீசன் முடிய உள்ள நிலையில் இரண்டாவது சீசன் ஆரம்பிக்க உள்ளது. சமீபத்தில் புரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதேசமயம் முதல் சீசனில் நடித்த ஸ்டாலினை தவிர மற்ற எந்த பிரபலங்களும் இரண்டாவது சீசனில் இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் ஹேமாவும் சீசன் 2 வில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வைரலாக, தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்று ஹேமா தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் நடிக்க நான் இதுவரை ஒப்பந்தமாகவில்லை. அப்படி ஏதாவது நல்ல விஷயம் நடந்தால் மகிழ்ச்சியுடன் உங்களிடம் தெரிவிக்கிறேன். பொய்யான செய்தியை பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.