லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
எதிர்நீச்சல் தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அத்துடன் அந்த தொடரில் வரும் சில கதாபாத்திரங்களும் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது. அந்த வகையில் மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு அடுத்தப்படியாக ஹரிப்பிரியா நடித்து வரும் நந்தினி கதாபாத்திரத்திற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மாரிமுத்து மாரடைப்பால் காலமானர். அந்த சோகத்திலிருந்தே ரசிகர்கள் மீளாத நிலையில் தற்போது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹரிப்ரியாவும் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் மருத்துவமனையில் கையில் ட்ரிப்ஸ் ஏறும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆனால், அவரது உடல்நிலைக்கு என்ன ஆயிற்று என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதனையடுத்து அவர் சீக்கிரமே உடல்நலம் தேறி வரவேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.