குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
சமூக வலைதளத்தில் பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு அவ்வபோது சர்ச்சைகளிலும் சிகிச்சை கொண்டு வருகிறார் நடிகை கஸ்தூரி. இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் அஜித்குமார் பற்றி டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், அஜித்னா யாரு? கேக்க மாட்டாங்களா. பின்னே பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன், மருமகன் இப்படி எதுவுமே இல்லாமல், யாரும் தூக்கி விடாம, யாரையும் கெடுக்காமல், சொந்த முயற்சியில் மேல வந்தவரு. அவரை எல்லாம் எப்படி தெரியும் என்று பதிவிட்டு இருந்தார் கஸ்தூரி.
இதற்கு அதிகமான ரசிகர்கள் பலதரப்பட்ட கமெண்ட்களை கொடுத்தார்கள். அதில் ஒருவர், அக்கா நீங்கள் நாடாரே கிடையாது. சங்கி எப்படி நாடாராக இருக்க முடியும். அனைவரையும் சமமாக பார்க்கும் நாங்கள் தான் ஒரிஜினல் நாடார் என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதற்கு கஸ்தூரி பதிலளிக்கையில், ‛ஜாதி பார்க்கும்போதே உங்கள் சமத்துவம் தெரிகிறது. உழைப்பால் உயர்ந்த சமூகத்தில் நீங்களும் பிறந்ததற்கு பெருமை கொள்ளுங்கள். திராவிஷத்தை எதிர்த்த காமராஜர் வழி தோன்றல்கள் நாம். அதைவிட பெருமை உண்டா?' என்று பதில் கொடுத்து இருக்கிறார் கஸ்தூரி. அவரது இந்த பதிவுக்கு அதிகப்படியான கமெண்ட்களும் லைக்குகளும் கிடைத்து வருகிறது.