ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்த நிலையில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி. சாதாரண சமையல் நிகழ்ச்சியை காமெடியாக காட்டும் இந்த நிகழ்ச்சிக்கு கோடிக் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார். இதுவரை 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து 4வது சீசன் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்தது.
தற்போது 4வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இறுதிசுற்றில் சிருஷ்டி, மைம் கோபி, ஷிவாங்கி, கிரண், விசித்ரா, ஆண்ட்ரியன் ஆகிய போட்டியாளர்கள், தங்களுடைய கோமாளிகளான புகழ், மோனிஷா, குரேஷி, சுனிதா, ஜி.பி.முத்து, சில்மிஷம் சிவா ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். இந்த இறுதிசுற்று நிகழ்ச்சி நாளை (30ம் தேதி) மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள். தொடர்ந்து 5மணிநேர நிகழ்ச்சியாக இந்த இறுதிப்போட்டி நடக்கிறது.