ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

நடிகை சைத்ரா ரெட்டி சின்னத்திரை, வெள்ளித்திரை என கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்து ரசிகர்களின் கிரஷ் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார். தற்போது நம்பர் 1 சீரியலான கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நேற்று முன்தினம் சைத்ராவின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினரும் சக நண்பர்களும் சைத்ராவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிர்ந்த சைத்ரா ரெட்டி, 'என்னுடைய 28வது பிறந்தநாளை ஸ்பெஷலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி' என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் சைத்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.




