லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிக்பாஸ் சீசன் 6-ல் அசீம் டைட்டில் பட்டத்தை வென்றார். இதுகுறித்து ஏராளமான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதற்கிடையில் பிக்பாஸில் ஜெயித்த பரிசுத்தொகையை கொரோனாவில் பெற்றோர்களை இழந்த மற்றும் ஏழை மாணவர்களின் படிப்பு செலவுக்கு வழங்கப் போவதாக அசீம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அசீம் தன்னுடையை பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து கொடுத்த வாக்கை செயலில் காட்டியிருக்கிறார். அந்த அறக்கட்டளையின் மூலம் அசீம் பல மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அசீமின் இந்த செயலை அனைவரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.