பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் பாண்டி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரிட்டோ மனோ நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக சந்தியா ராமசந்திரன் நடித்து வருகிறார். ரீல் ஜோடிகளான இருவரும் நிஜத்திலும் காதல் ஜோடிகளாக வலம் வர, கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து மனோ - சந்தியாவின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இந்நிலையில், தவமாய் தவமிருந்து சீரியலை விட்டு ப்ரிட்டோ மனோ திடீரென விலகியுள்ளார். அதேசமயம், உடனடியாக அவருக்கு பதிலாக பாண்டி ரோலில் நடிக்க நடிகர் சுதர்சனம் கமிட்டாகியுள்ளார். சுதர்சனம் சிப்பிக்குள் முத்து, வேலைக்காரன் மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜக்குமாரி தொடர்களின் மூலம் ஏற்கனவே நேயர்களுக்கு பரிட்சயமானவர் தான். இருப்பினும், ப்ரிட்டோ மனோவின் திடீர் விலகல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.




