லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு ரோல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. தற்போது சின்னத்திரையில் சில சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார். சென்னை கே கே நகர், பி.டி.ராஜன் சாலையில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவர் வீட்டு வாசலில் இருக்கும் சில பொருட்கள் காணாமல் போவதால் சந்தேகமடைந்த சங்கீதா, சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்துள்ளார்.
அதில், உயர் ரக இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் சங்கீதா வீட்டு வாசலின் முன் இருக்கும் செருப்பை காலால் லிப்ட்டுக்குள் தட்டிவிட்டு பின் அதை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தற்போது வீடியோ வெளியிட்டுள்ள அவர், தனது அம்மா மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் நிலையில், மர்ம நபர்கள் கூலாக திருடிச்செல்வதை பார்க்கும் போது எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.