ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த், சம்யுக்தா விவகாரத்தில் முதல் ஆளாக விஷ்ணுகாந்துக்கு சப்போர்ட் செய்து பதிவிட்டார் நடிகை ரிஹானா. முன்னதாக அர்னவ் விவகாரத்தில் அர்னவ் செய்த தவறுகளை அம்பலபடுத்திய ரிஹானா, விஷ்ணுகாந்துக்கு குட் பாய் சர்டிபிகேட் கொடுத்ததால் விஷ்ணுகாந்த் பக்கம் ஆதரவு பெருகிறது. இந்நிலையில், ரிஹானா குறித்து ரசிகர் ஒருவர் சம்யுக்தாவிடம் கமெண்டில் கேட்க, அதற்கு பதில் அளித்துள்ள சம்யுக்தா, 'ரிஹானா விஷ்ணுகாந்த் கூட வாழ்ந்த மாதிரி சப்போர்ட் பண்றாங்க. என்ன பத்தி பேசுறாங்களே அவங்க பாஸ்ட்ட தோண்ட ஆரம்பிச்சா சிரிப்பா சிரிச்சிடும். ரிஹானா என் பிரச்னையில மட்டுமல்ல யார் பிரச்னைனாலும் முதல் ஆளா பேட்டி கொடுத்துடுவாங்க. ஏன்னா, அந்த டாப்பிக்கோட சேர்ந்து அவங்களும் பிரபலமாகி விடலாம்ல்ல! அதுக்குதான் இப்படி எல்லாம் விளம்பரம் செய்றாங்க. சரி இப்படியாச்சும் பொழச்சுட்டு போகட்டும்' என நக்கலாக பதில் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்யுக்தா ஆதரவாளர்கள் ரிஹானாவை கிண்டலடிக்க துவங்கியுள்ளனர்.