காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
சின்னத்திரை நடிகையான வீணா வெங்கடேஷ் பல ஹிட் சீரியல்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் லீவ் கேட்டதற்காக சித்தி-2 மற்றும் காற்றுக்கென்ன வேலி ஆகிய தொடர்களிலிருந்து நீக்கப்பட்டார். இதனை இன்ஸ்டாகிராமிலும் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். அதன்பின் மீனாட்சி கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களாக சுஜாதா என்ற நடிகை நடித்து வந்தார். அண்மையில் அவரும் காற்றுக்கென்ன வேலி சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து இனி யார் மீனாட்சி? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த வேளையில் ஏற்கனவே நடித்து விலகிய மீனாட்சி கதாபாத்திரத்திலேயே வீணா வெங்கடேஷ் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்திலேயே அவர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியிலும் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.