என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

ராதிகா சரத்குமார் தயாரிப்பில் கிழக்கு வாசல் தொடர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர், ரேஷ்மா முரளிதரன், அருண்ராஜன், அஸ்வினி, ஆனந்த் பாபு, ரேஷ்மா முரளிதரன், வெங்கட் ரங்கநாதன், தினேஷ், ரோஜா ஸ்ரீ என சின்னத்திரையின் பிரபல நடிகர்கள் பலரும் இந்த தொடரில் சங்கமித்துள்ளனர்.  அதிக எதிர்பார்ப்பிற்கிடையே உருவாகி வரும் இந்த தொடரில் ராதிகாவும், வேணு அர்விந்தும் மீண்டும் ஜோடியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் விரைவில் அவர்களும் ஷூட்டிங்கில் இணைவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
இந்நிலையில், கிழக்கு வாசல் தொடரின் முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இண்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒட்டு மொத்த பிரபலங்களையும் செல்திரையில் பார்த்து குஷியான ரசிகர்கள் விரைவில் சீரியலை டிவி திரையில் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            