அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

நடிகை கேப்ரில்லா சார்ல்டன் தனது அபாரமான நடன திறமையாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் சின்னத்திரையில் முன்னணி பிரபலமாக வலம் வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீசன் 2-ல் கதாநாயகியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கேப்ரில்லா ஆட்டோ ஓட்டி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். சவாரி கேட்கும் நபரிடமும் 100 ரூபாய் கேட்கிறார். ஈரமான ரோஜாவே 2 தொடருக்காக ஆட்டோ ஓட்டும் கேபி, பல்வேறு விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்வதாகவும், அதில் ஒன்றாக தற்போது ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் 'நடிக்கிற வாய்ப்பில்லன்னா கேபி ஆட்டோ ஓட்டியே பொழச்சுக்குவாங்க' என நகைச்சுவையாக கேலி செய்து வருகின்றனர்.