மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கூடவே, வழக்கம் போல் வெங்கடேஷ் பட் கோமாளிகளை அடிப்பதாக புகாரும் எழுந்து வருகிறது. முந்தைய சீசனில் வெங்கடேஷ் பட், புகழை பின்னாடி இருந்து மிதிப்பார். அது நிகழ்ச்சியின் ஜாலியான தருணத்தில் பன்னாக தான் செய்யப்பட்டது. இருப்பினும் சோஷியல் மீடியாவில் பலரும் வெங்கடேஷ் பட்டின் அந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த சீசனிலும் வெங்கடேஷ் பட் கோமாளிகளை அடிப்பது, எதையாவது தூக்கி எறிவது என செய்து வருகிறார். இதைபார்த்து கடுப்பான ரசிகை ஒருவர் இன்ஸ்டாகிராமில் வெங்கடேஷ் பட்டின் போஸ்ட்டுக்கு கீழே காட்டாமாக கமெண்ட் செய்திருந்தார். அதில், 'கோமாளிகள் மீது கண்டதை தூக்கி எறியாதீர்கள். மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்கள். நகைச்சுவையாகவே இருந்தாலும் மலேசியர்கள் இது போன்ற செயலை ஒப்புக்கொள்வதில்லை. நீங்கள் செய்வது எரிச்சலூட்டும் விதமாக இருக்கிறது' என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் கொடுத்துள்ள வெங்கடேஷ் பட், 'இது வெறும் நிகழ்ச்சி தான். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். செந்திலை அடிக்கக்கூடாது என்று கவுண்டமணியிடம் உங்களால் சொல்ல முடியுமா? சார்லி சாப்ளின் அடிவாங்குவதை நிறுத்த முடியுமா? டாம் அண்ட் ஜெர்ரியில் கார்ட்டூனில் ஜெர்ரி டாமை எரிச்சலூட்டும் செயலை நிறுத்த சொல்லமுடியுமா. நான் சொல்லிவிட்டேன் என்பதற்காக நீங்கள் விஷத்தை குடிப்பீர்களா?. நீங்களே சிந்தித்து வளருங்கள்' என பதிலடி கொடுத்துள்ளார்.
வெங்கடேஷ் பட்டின் பதிலை ஆதரித்து 'ஒரு காமெடி நிகழ்ச்சியில் இதெல்லாம் சகஜம்' என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.