லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தனியார் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்து வரும் 'எதிர்நீச்சல்' சீரியல் விமர்சன ரீதியிலும் தரமான சீரியல் என்ற நற்பெயரை பெற்றுள்ளது. அதேசமயம் பெண்களை இன்னும் அடிமைப்படுத்துவதாக சீரியலில் காட்டப்படுகிறது என விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதையும் மீறி டிஆர்பியில் இடம்பிடித்து வரும் சீரியல்களுக்கு மத்தியில் சமூகபார்வையோடு எதார்த்தமான கதைக்களத்தில் மீண்டும் ஒரு தரமான சீரியலை தந்துள்ளார் இயக்குநர் திருசெல்வம் என ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அதில் நடித்து வரும் நடிகர்களும் போட்டிபோட்டுக் கொண்டு காட்சிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், எதிர்நீச்சல் குடும்பத்திற்கு அதாவது அதில் நடித்து வரும் நடிகர்களுக்கு இயக்குநர் திருசெல்வம் ஹோட்டலில் ட்ரீட் வைத்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் கமலேஷ் தனது சோஷியல் மீடியாவில் பகிர ரசிகர்கள் தங்களது அன்பை அக்குடும்பத்தினருக்கு வெளிப்படுத்தி வருகின்றனர்.