அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பிக்பாஸ் வெற்றியாளரான அசீம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். அண்மையில் பேன்ஸ் மீட் ஒன்றில் பேசிய அசீம், 'ஏன் டா? என் மகன் கூட நேரத்தை செலவழிக்க பல ஆயிரம் மணிநேரம் இருக்கு. அந்த ஷோ பாத்து தான் என் மகன் வளரனும்னு அவசியம் இல்லை' என்று கூறியிருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் அசீம் கோபப்படும்போதும், தவறான செயல்கள் செய்யும் போதும் கமல்ஹாசன் 'அசீம் உங்கள் மகன் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்' என்று சொல்லி தான் அட்வைஸ் செய்வார். இந்நிலையில், அசீமின் இந்த பேச்சு கமலுக்கு எதிராக இருப்பதாக பலரும் சோஷியல் மீடியாக்களில் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர்.
விஷயம் பெரிதாவை புரிந்து கொண்ட அசீம், வழக்கம் போல் சரண்டர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கமல் எனக்கு தந்தை போன்றவர். நான் ஆடியன்ஸுக்கு சொன்னதை சிலர் கமல் சாரை சொன்னதாக தவறாக பரப்பி வருகிறார்கள். கமல்சாரை நான் மிகவும் மதிக்கிறேன். எனவே, தேவையில்லாமல் வதந்திகளை பரப்பாதீர்கள்' என்று கூறியுள்ளார்.