ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பிக்பாஸ் டைட்டில் வின்னரான அசீம் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக சில நாட்களாக செய்திகள் உலா வருகிறது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் பலரும் அசீமுக்கு வாழ்த்து செய்திகளை அனுப்ப ஆரம்பித்தனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள அசீம், 'சீரியலில் நான் நடிப்பதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்தி. நான் சினிமாவில் நடிக்க தான் முழுகவனம் செலுத்தி வருகிறேன். நான் நடித்துள்ள படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரண்டு படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே சீரியல் பக்கம் மீண்டும் வருவதற்கு வாய்ப்பே இல்லை' என்று கூறியுள்ளார்.