கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீமுக்கு பொதுமக்கள் மத்தியில் எப்போதுமே பெரிய அளவில் ஆதரவு கிடைத்ததில்லை. அவருடன் நடித்த நண்பர்கள் கூட அசீமுக்கு எதிராக தான் ஊடகங்களில் பேசி வந்தனர். ஆனால், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா விஜயகுமார் ஆரம்பம் முதலே அசீமிற்கு சப்போர்ட் செய்து வந்தார். அவர் தான் டைட்டில் பட்டம் வெல்ல வேண்டும் என்றும் கூறி இருந்தார். அதற்கேற்றார்போல் இப்போது அசீம் டைட்டில் பட்டத்தையும் வென்றுவிட்டார். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அசீமை வீட்டிற்கு அழைத்து வனிதா விருந்து கொடுத்துள்ளார். அப்போது அசீமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள வனிதா, 'நாங்கள் ரூல்ஸ் பிரேக்கர்ஸ்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.