மீண்டும் போட்டியிட மறுப்பு ; பொதுக்குழுவில் ஏமாற்றம் தந்த மோகன்லால் | 'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் செல்ல மகளாக, சகோதரியாக மாறியிருக்கிறார் ஷிவின் கணேசன். மூன்றாவது இடத்தை பிடித்துள்ள ஷிவினுக்கு வெளியுலகில் பேராதரவு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அனைவருக்கும் எப்படியாவது நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துவிடும். அந்த வரிசையில், ஷிவினுக்கும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் டிவியின் ஹிட் சீரியலான 'பாரதி கண்ணம்மா' தொடர் க்ளைமாக்ஸை எட்டியுள்ள நிலையில், அதை மேலும் விறுவிறுப்பாக்கும் வகையில் ஷிவின் கணேசன் என்ட்ரி இருக்குமென்று கூறப்படுகிறது. பாரதி கண்ணம்மா தொடரில் தான் நடிக்கவிருப்பதை ஷிவினே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். இதனால் ஷிவினின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.