'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் | பிளாஷ்பேக்: அண்ணி உறவை பேசிய முதல் படம் | குபேரா : தனுஷைப் பாராட்டிய சிரஞ்சீவி |
பிரபல சின்னத்திரை நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான தேவிப்ரியா திரைத்துறையில் அட்ஜெஸ்மெண்ட் செய்யாததால் தான் பல வாய்ப்புகளை இழந்ததாக கூறியுள்ளார். சினிமாவை பொறுத்தவரை அஜித் நடித்த வாலி படத்தின் ஒரு சிறிய காட்சியில் மட்டுமே நடித்து பாராட்டுகளை பெற்றிருப்பார் தேவிப்ரியா. ஆனால், அவர் தொடர்ந்து சினிமாவில் பிரகாசிக்கவில்லை. சின்னத்திரையில் வில்லி நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக புகழுடன் வலம் வருகிறார்.
அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'நியாயமா சொல்லணும்னா சினிமாவுல நடிக்கணும்னா படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு. அது இல்லைன்னு நான் சொல்லமாட்டேன். சினிமாவுல சின்ன கேரக்டர்ல நடிக்கணும்னா கூட பல பேர் கூட அட்ஜெஸ்மெண்ட் பண்ண வேண்டியிருக்கு. இது நடிகைகளுக்கு பரவலா நடக்குது. இதை பொறுத்துக்க முடியாம தான் பல நடிகைகள் கல்யாணம் செஞ்சிகிட்டு செட்டில் ஆகிட்றாங்க. நான் அந்த மாதிரியான வாய்ப்புகள விரும்புறதே கிடையாது. அந்த நோக்கத்தோடு யாராவது என்னை அனுகினால் உதறி தள்ளிடுவேன். இந்த காரணத்தினாலேயே எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்காமலேயே போய்டுச்சு' என்று கூறியுள்ளார்.