அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகை கஸ்தூரி சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக சினிமா முதல் அரசியல் வரை தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார். அதையும் தாண்டி இந்த வயதிலும் அவ்வப்போது போட்டோஸ், வீடியோக்கள், ரிலீஸ் வீடியோ என பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ‛அக்னிநட்சத்திரம்' படத்தில் வரும் ‛ஒரு பூங்காவனம்...' பாடல் ஸ்டைலில் நீச்சல்குளத்தில் குளிக்கும் கஸ்தூரி தனது ஹாட்டான அந்தபாடல் உடன் கூடிய ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டால் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்துவிட்டு சிலர் கஸ்தூரியின் வயதை வைத்து கலாய்த்தும், வர்ணித்தும், விமர்சித்தும் என கலவையான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் 'உங்களுக்கு ட்ரிப்யூட் செய்யலாமா? ப்ளீஸ் ஓகே சொல்லுங்க' என்று கேட்க, கஸ்தூரி அந்த நபரை திட்டாமல், 'நல்ல பண்புடன் நடந்து கொள்ளுங்கள். அசிங்கமான விஷயங்கள் வேண்டாம்' என்று நிதானமாக பதிலளித்துள்ளார்.