ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சரவணன், சினிமா கேரியரில் ரீ-என்ட்ரி கொடுத்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 2019ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரையிலும் அறிமுகமானார். அந்த சீசனில் சரவணன் 44 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து பின் வெளியேறினார். இந்நிலையில், சரவணனுக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் சரிவர கிடைக்காத நிலையில், விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள 'மகாநதி' என்கிற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். மகாநதி ஷூட்டிங் ஸ்பாட்டில் சரவணன் மற்ற ஆர்ட்டிஸ்ட்டுகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 'நந்தா', 'பருத்திவீரன்', 'கடைக்குட்டி சிங்கம்', 'கோலமாவு கோகிலா' உட்பட சில படங்களில் தனது தரமான நடிப்பால் கவனம் ஈர்த்த சரவணனுக்கு சின்னத்திரையிலும் வெளிச்சம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.