இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
இந்திய அளவில் பெரிய வரவேற்பை பெற்ற வெப் சீரீஸ்களை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடர்களாக ஒளிபரப்ப இருக்கிறது. அந்த வகையில் பாதி காதல் பாதி துரோகம், லண்டன் நிமிடங்கள், தொட தொட ரகசியம் மற்றும் பொய் விளையாட்டு என்ற வெப் சீரிஸ்களை நாளை முதல் (ஜனவரி 25) முதல் பிப்ரவரி 1 வரை இரவு 9 மணி முதல் 12 மணி வரை அடுத்தடுத்து ஒளிபரப்ப உள்ளது. இவைகள் ஹிந்தி தொடர்களாக இருந்தாலும் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது.
பாதி காதல் பாதி துரோகம் (ஆதா இஷ்க்) தொடரில் ஆம்னா ஷெரீப், பிரதிபா ரந்தா மற்றும் கவுரவ் அரோரா நடித்துள்ளனர். தாயும் மகளும் ஒரே நபரைக் காதலிக்கும்போது ஏற்படும் விளைவுகளை என்ன என்று ஆராயும் காதல் நாடகம்.
அர்ஜுன் ராம்பால் மற்றும் புரப் கோஹ்லி நடித்த லண்டன் நிமிடங்கள் (லண்டன் பைல்ஸ்) ஒரு ஊடக முதலாளியின் மகள் காணாமல் போன ஒரு முக்கிய வழக்கை சுற்றி நடக்கும் கதை.
கண்டேல்வால் மற்றும் ஆஹானா குமார் நடித்த த்ரில்லர் வெப் சீரிஸான பொய் விளையாட்டு (மர்சி), பார்வையாளர்கள் யார் குற்றவாளி என்று யூகிக்க வைக்கும் வகையில் பொய்களும் துரோகங்களும் குறுக்கு வழியில் செல்லும் உண்மையை வெளிக்கொணர்கிறது.
தொட தொட ரகசியம் (கான் கேம் சீசன் 2) 2020ல் லாக்டவுன் நாட்களில் வெளியான தொடர். தொடர் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி சம்பந்தப்பட்ட கொலை மர்மமாகும்.