மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா ராணி 2' தொடரில் வில்லியாக நடித்து மிகவும் புகழ் பெற்றவர் வீஜே அர்ச்சனா. சிறந்த வில்லிக்கான சிறப்பு விருதையும் தட்டிச் சென்ற அவர், திடீரென சீரியலை விட்டு விலகினார். வாழ்வின் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல இருப்பதாகவும், விரைவில் புதிய பரிமாணத்தில் ரசிகர்களை சந்திப்பேன் எனவும் அப்போது தெரிவித்திருந்தார். அவர் சினிமாவில் நடிக்க இருப்பதால் தான் சீரியலை விட்டு விலகிவிட்டார் என செய்திகள் பரவியது. ஆனாலும், அர்ச்சனா என்ன செய்கிறார் என்பது குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை. அவ்வப்போது போட்டோஷூட் மட்டுமே நடத்தி வந்தார். நீண்ட நாட்கள் கழித்து சமீபத்தில் தான் அவர் நடிப்பில் 'தம்மா துண்டு' என்ற ஆல்பம் பாடல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த அர்ச்சனா தற்போது அருள்நிதி நடிக்கும் டிமாண்டி காலனி 2 படத்தில் அருள்நிதியின் தங்கையாக நடிக்க கமிட்டாகி உள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'அவள் என்னவள்' என்கிற வலைதொடரும் விரைவில் வெளியாகவுள்ளது. இவ்வாறாக இந்த புத்தாண்டின் தொடக்கமே அர்ச்சனாவுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ள நிலையில், அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.