ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகராக அறிமுகமானவர் அழகப்பன். தொடர்ந்து 'ஆபிஸ்' 'மாப்பிள்ளை', 'ரெட்டை வால் குருவி', 'தலையனை பூக்கள்', 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் சினிமாவில் 'விதி மதி உல்ட்டா', 'நண்பர்கள் கவனத்திற்கு', 'வெயிலோடு விளையாடு' ஆகிய படங்களில் சப்போர்ட்டிங் அல்லது காமெடியன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால், அவர் தற்போது 'ஆனந்தராகம்' தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். மக்களிடத்திலும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ஆனந்த ராகம் தொடர் 100 வது எபிசோடை எட்டியுள்ளது. இதை முன்னிட்டு அழகப்பன் தனது வெளியிட்டுள்ள பதிவில், '100 வெறும் நம்பர் தான். ஆனால் ஹீரோவாக எனக்கு இது 100வது எபிசோடு. என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டதற்கும் பாராட்டியதற்கும் நன்றி. இந்த தருணத்தில் நான் எனது சக நடிகர்களுக்கும் எனது குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பெரிய வெற்றியை எனக்களித்த மக்களுக்கும் மிகவும் நன்றி. இதேபோல் 1000, 2000 எபிசோடுகளை கொண்டாடவும் ஆசைபடுகிறேன்' என்று கூறியுள்ளார்.
அழகப்பனின் இந்த பதிவிற்கு சீரியல் ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான கமெண்டுகளுடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
--