பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் |
தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் குமரன் தங்கராஜன். விஜய் டிவி சீரியல்களின் மூலம் நடிகராகவும் என்ட்ரி கொடுத்தார். குமரன் தற்போது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிக்க முயற்சித்து வந்த குமரனுக்கு அண்மையில் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றும் வரும் 'வதந்தி' வலைதொடரில் எஸ்.ஜே.சூர்யா, நாசர், லைலா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் குமரனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாரட்டுகளை பெற்று வருகிறார்.
குமரனின் சினிமா கேரியரில் இது நல்லதொரு தொடக்கம் என்றே சொல்லலாம். இந்நிலையில், குமரனும் நடிகை லைலாவும் சேர்ந்து டூயட் ஆடியுள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 'அள்ளி தந்த வானம்' படத்தின் டூயட் பாடலான 'கண்ணாலே மியா மியா' என்ற பாடலுக்கு லைலாவுடன் சேர்ந்து நடனமாடியுள்ள குமரன் தனது பேன் பாய் மொமண்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், 'எப்படி இதை செய்யாமல் இருக்க முடியும். எப்போதுமே நான் உங்கள் ரசிகன். குறிப்பாக இந்த பாடலில்' என்று பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவிலேயே நடிகை லைலாவும் 'ஒருவழியாக இதை செய்துவிட்டோம். உனது ஆசை நிறைவேறியது' என நட்புடன் கமெண்ட் அடித்துள்ளார்.