ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி | பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் | பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் |
தொலைக்காட்சி சீரியல்களில் 2015ம் ஆண்டிலிருந்தே அறிமுகமாகி நடித்து வரும் திவ்யா கணேஷூக்கு சின்னத்திரை ரசிகர்கள் ஏராளம். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலெட்சுமி', 'செல்லம்மா' ஆகிய தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்த திவ்யா இப்போது நடித்து வரும் இரண்டு சீரியல்களிலுமே கேரக்டர் ரோல் தான் செய்து வருகிறார். இருப்பினும் அவருக்கான ரசிகர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சின்னத்திரையிலோ, சினிமாவிலோ திவ்யா விரைவில் ஹீரோயினாக கால்பதிக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில், திவ்யா கணேஷ் திடீரென 'செல்லம்மா' சீரியலிலிருந்து விலகியுள்ள செய்தி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லம்மா தொடரில் இதுவரை அவர் நடித்து வந்த மேகா கதாபாத்திரத்தில் தற்போது ஆர்யாவின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஸ்ரியா சுரேந்திரன் நடித்து வருகிறார்.
செல்லம்மா தொடரின் நாயகன் 'அர்னவ்' குடும்ப பிரச்னையில் சிக்கி சிறை சென்று வந்ததிலிருந்து அந்த தொடரானது டிஆர்பியில் திணறி வருகிறது. இதன் காரணமாகத்தான் திவ்யாவும் தொடரிலிருந்து விலகிவிட்டதாகவும் சீரியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்து வருகிறது.