சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் |
தொலைக்காட்சி தொகுப்பாளினி கிரிஜா ஸ்ரீ பல நல்ல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும் 'அந்தரங்கம்' மற்றும் 'சமையல் மந்திரம்' நிகழ்ச்சி அவருக்கான டிரேக் மார்க்காக மாறிவிட்டது. இதனாலேயே அவர் திருமணத்துக்கு பின் மீடியாவை விட்டு ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். இருப்பினும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக பல சின்னத்திரை பிரபலங்களின் போட்டோஷூட்களில் வேலை செய்துள்ள கிரிஜா சமீபகாலங்களில் இன்ஸ்டாவிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இதன் மூலம் மீண்டும் ஊடக வெளிச்சத்தில் கிரிஜா ஸ்ரீ வந்துள்ளார். அந்த வகையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் பற்றி கேட்ட போது, 'ஆண் பெண் வேறுபாடெல்லாம் எப்பவோ மாறிடுச்சு. ஆனால், அசீம் இப்பவும் ரொம்ப பின் தங்கியே இருக்கார். அவருக்கு நான் தான் பெருசுங்கிற எண்ணம் இருக்கு. அதனாலேயே மத்தவங்கள எல்லை தாண்டி அசிங்கப்படுத்தக்கூடாது. அசீம் கூட ஏற்கனவே வொர்க் பண்ணியிருக்கிறதால அவர பத்தி எனக்கு தெரியும். அசீமால பல நடிகைகள் ஷூட்டிங்க நிறுத்திட்டு போயிருக்காங்க. அவர் கூட நடிச்ச ஹீரோயின்கள அழவச்ச சம்பவங்களும் நடந்திருக்கிறதா கேள்வி பட்டிருக்கேன்' என்று கூறியுள்ளார்.