ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிக்பாஸ் வீட்டில் தனது அதிகாரத்தை தொடர்ந்து நிலைநாட்டி வரும் அசீம், இந்த வாரம் அத்துமீறி அமுதவாணனை பிடித்து தள்ளிவிட்டார். இதனால் இருவருக்குமிடையே பெரிய அளவில் வாக்குவாதம் நடந்தது. தொடர்ந்து பேசிய அசீம் 'நெஞ்சில உரம் இருந்தா என்ன அடிடா' என ஆவேசமாக பேசி கத்தினார். அசீமின் இந்த செயலை பலரும் தற்போது கண்டித்து வருவதுடன், அசீமிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், கேமரா முன் பேசிய அசீம் 'நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகனும். வீடே எனக்கு எதிரா இருக்கும் போது தொடர்ந்து இந்த விளையாட்ட விளையாட நான் விரும்பல' என கூறியுள்ளார். மேலும், அமுதவாணனை அடித்தது குறித்து பேசிய அசீம் 'அந்த சண்டை கோபத்தால நடந்தது. அதை தயவு செஞ்சு டெலிகாஸ்ட் பண்ணிடாதீங்க ப்ளீஸ். அது டெலிகாஸ்ட் ஆச்சுனா ரொம்ப பெரிய விஷயமா மாறிடும். என்னோட பெயர் கெட்டு போய்டும்' என பிக்பாஸிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.