'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்து சீசன் 6ல் உள்ளே நுழைந்த ராபர்ட் மாஸ்டர் ஆரம்பம் முதலே சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. ஆனால், ரச்சிதாவை காதலிப்பதாகவும், க்ரஷ் என்றும் சொல்லிக்கொண்டு பிக்பாஸ் வீட்டினுள் அவர் அடித்த லூட்டிகள் பல. ஒருவழியாக கடந்த வார எவிக்சனில் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். தற்போது பிசியாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். இந்நிலையில், வனிதா தன் மீது வைத்துள்ள விமர்சனங்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.
திருமணமாகி பெரிய மகள் இருக்கும் போது ராபர்ட்டுக்கு இது தேவையா? அசிங்கமாக இருக்கிறது என்றும் ரச்சிதா விவகாரம் தொடர்பில் விமர்சித்திருந்தார் வனிதா.
இதற்கு பதிலளித்துள்ள ராபர்ட் மாஸ்டர், 'பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்பது என் கனவு. அந்த வகையில் வனிதா மற்றும் சாண்டியிடம் பேசியிருக்கிறேன். இரண்டு முறை சென்று வந்தவர் என்பதால் வனிதாவிடம் பிக்பாஸ் வீடு பற்றி கேட்டேன். ஆனால் வனிதா தான் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பை வாங்கி கொடுத்தார் என்பது பொய். அதேபோல் என்னை விமர்சித்து வனிதா பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வனிதா என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்' என அவர் ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.




