விடை பெற்றார் நடிகர் டெல்லி கணேஷ் ; வான் படை சார்பில் அஞ்சலி : உடல் தகனம் | பிளாஷ்பேக்: “தாய்க்குப்பின் தாரம்” தந்த தரமான 'காளை'யின் பின்னணி | சின்னத்திரைக்கு திரும்பிய நடிகர் அசோக் | பிளாஷ்பேக்: சாக்லெட் பாய் சிவகுமாரை தாதா ஆக்கிய 'வண்டிச் சக்கரம்' | கேம் சேஞ்சரில் 2 வேடத்தில் ராம்சரண்: தோற்றம் வெளியானது | உடல்நலக்குறைவு: சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறார் சிவராஜ்குமார் | இந்திரா சவுந்தர்ராஜனின் நிறைவேறாத சினிமா கனவு | பிளாஷ்பேக்: பயோபிக் படங்களில் மட்டுமே நடித்தவர் | 'அமரன்' தாறுமாறு ஓட்டம் :'கங்குவா' படத்திற்கு புதிய சிக்கல்? | கார் விபத்திலிருந்து உயிர் தப்பிய ஜீவிதா |
கண்ணத்தாள் திரைப்படத்தில் வடிவேலு நடித்திருந்த சூனா பானா கதாபாத்திரம் இன்றளவும் பலரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும், வடிவேலு விஷம் அருந்தும் காட்சியில் 'விஷம் அப்படித்தான்னே' இருக்கும் என வடிவேலுவுக்கே டப் கொடுத்த குரலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அவர் தான் அந்த படத்தின் இயக்குநர் பாரதி கண்ணன். ஒருகாலத்தில் கண்ணத்தாள், ஸ்ரீ பண்ணாரியம்மன், ராஜ ராஜேஸ்வரி என வரிசையாக பக்தி படங்களாக எடுத்து குவித்து வந்தார்.
தற்போது சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கி 'பாண்டவர் இல்லம்', 'எதிர்நீச்சல்' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் 'சூனா பானா கதாபாத்திரம் என்னுடைய மாமா தான். அவர் உண்மையாகவே ஒரு திருடர். உண்மையான சூனா பானா தேங்காய் திருடும்போது மரத்திலிருந்து விழுந்து செத்துப்போய்விட்டார்' என அந்த கதாபாத்திரம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார். அந்த வீடியோவானது தற்போது வெட்டி ஒட்டப்பட்டு ரீல்ஸ் வீடியோவாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.