ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தொகுப்பாளரும், நடிகையுமான ரம்யா சுப்ரமணியம் எழுத்தாளராகி உள்ளார். அவரின் முதல் புத்தகமான ஸ்டாப் வெயிட்டிங் என்ற புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் வெளியிடுகிறது.
இது குறித்து ரம்யா கூறும்போது, "இது என்னுடைய முதல் புத்தகம். இதில் என்னுடைய மொத்த ஆன்மாவையும் கொடுத்துள்ளேன். இது வெறும் பிட்னெஸ் வழிகாட்டியோ என்னுடைய நினைவுக் குறிப்போ மட்டுமல்ல, இது இரண்டையும் விட இன்னும் பெரிதாக இருக்கும் என நம்புகிறேன். ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்ட என் வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் உண்மையாக தெரிவித்து இருக்கிறேன். என்னுடைய இந்த புதிய பயணத்தில் உங்கள் அனைவரது அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்" என்கிறார்.
ரம்யா ஒருகாலத்தில் உடல் பருமன் காரணமாக உடல் கேலிக்கு ஆளாக்கப்பட்டார். இதனால், எல்லாரையும் போலவே உடல் இளைக்க வேண்டும் என்று எண்ணி தன் பயணத்தை ஆரம்பித்தார். பலவிதமான டயட், ஜிம்மில் தீவிரமான வொர்க்கவுட்ஸ் செய்து உடல் எடையை குறைத்தார். அதன் பிறகு நடிகை ஆனார்.
தன் சொந்த அனுபவம், செய்த தவறுகள், வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் பிட்னெஸ் பயணத்தில் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை இந்த புத்தகத்தில் ரம்யா எழுதி உள்ளார். ரம்யா தற்போது பிட்னஸ் ஜிம் ஒன்றை நடத்தி வருவதோடு உடல் ஆரோக்கியம் குறித்து டியூசனும் எடுக்கிறார்.