அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து படிப்படியாக யூ-டியூப், சின்னத்திரை, சினிமா, பிக்பாஸ் என தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகிவிட்டார். இணைய உலகில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் செலிபிரேட்டியாக வலம் வர ஆரம்பித்துவிட்டார். அவருக்கு, தற்போது மாஸ் ஹீரோவுக்கு இணையான ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. காரணம், சமீபத்தில் கன்னியாகுமரியில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜி.பி.முத்து சென்றுள்ளார். அப்போது அவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கடையின் உட்புறத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் கூடினர்.
ஒரு மாஸ் ஹீரோவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் போல ஏராளமான நபர்கள் செல்போன் கைகளுடன் செல்பி எடுப்பதற்காக ஜி.பி.முத்துவை சூழ்ந்து கொண்டனர். அந்த கூட்டத்தை கண்ட்ரோல் செய்வதற்காகவே பவுன்சர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. இதனால் அந்த பகுதியே சில மணி நேரம் ஸ்தம்பித்து போனது. அந்த வீடியோவை திடீரென பார்க்கும் போது ஏதோ பெரிய ஹீரோவுக்காக தான் கூட்டம் கூடியுள்ளது என்று நினைக்க தோன்றும். ஆனால், அந்த தானா சேர்ந்த கூட்டம் ஜி.பி.முத்துவை பார்க்க தான். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் ஜி.பி.முத்துவுக்கு இவ்வளவு மாஸா என பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பின்ன யாரு? தலைவன் சன்னி லியோனுக்கே பால்கோவா கொடுத்தவராச்சே!!!