லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தொடர்ந்து பல தரமான தொடர்களை கொடுத்து வந்த இயக்குநர் திருமுருகன், தற்போது ஒரு சின்ன கேப் எடுத்துள்ளார். திருமுருகன் இயக்கி நடித்த அனைத்து தொடர்களிலுமே தன் கதாபாத்திரத்தின் பெயரை கோபி என்றே வைத்துக்கொள்வார். கோபி கதாபாத்திரம் சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போகவே திருமுருகனை கோபி என்றே பலரும் அழைத்து வருகின்றனர்.
2020.,க்கு பிறகு திருமுருகன் பெரிதாக ஆக்டிவாக இல்லாமல் இருந்த திருமுருகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. அதை பார்த்த நெட்டீசன்கள் விமல் படத்தில் கோபி அண்ணாவின் புது கெட்டப் என அந்த புகைப்படங்களை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து திருமுருகன் சினிமாவில் நடிக்க போய்விட்டதாகவும் அதனால் இனி சீரியல் எடுக்கமாட்டார் என்றும் செய்திகள் தற்போது வலம் வரத் தொடங்கியுள்ளன. உண்மையில் திருமுருகன் தற்போது எந்த ப்ராஜெக்டிலும் கமிட் ஆனதாக தெரியவில்லை.
இயக்குநர் மற்றும் நடிகருமான போஸ்வெங்கட் தற்போது விமலை வைத்து மாபொசி என்ற படத்தை இயக்கி வருகிறார். போஸ் வெங்கட்டை திருமுருகன் தனது மெட்டி ஒலி சீரியலில் அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த முறையில் குருவாக தனது சிஷ்யனின் படப்பிடிப்பு தளத்திற்கு ஒரு கெஸ்டாக பார்வையிட சென்றிருந்தார் திருமுருகன். கடந்த செப்டம்பர் மாதமே வெளியான இந்த புகைப்படங்களுக்கு நெட்டீசன்கள் தற்போது புதுப்புது கதைகளை எழுதி வருகின்றனர்.