ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் | படப்பிடிப்பை முடித்த விஷ்ணு விஷால், ராம்குமார் | வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ? | வெற்றியைப் பதிவு செய்வாரா 'படை தலைவன்' ? |
வெற்றி மற்றும் ஷீலா ராஜ்குமார் முக்கிய வேடங்களில் நடித்திருந்த படம் ஜோதி. ஏ.வி.கிருஷ்ணா பரமாத்மா இயக்கியுள்ள இப்படத்தில் கிரிஷா குருப், நடிகர் மைம் கோபி மற்றும் நடிகர் இளங்கோ குமரவேல் ஆகியோர் நடித்துள்ளனர். கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் உள்ள குழந்தைகளை திருடும் கொடூர மனம் கொண்ட கும்பலை பற்றிய படம். இதில் ஷீலா ராஜ்குமார் கர்ப்பத்தில் உள்ள குழந்தையை பறிகொடுத்த தாயாக நடித்திருந்தார். வெற்றி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சஸ்பென்ஸ் தரில்லர் வகை படமாக இது உருவாகி இருந்தது. கடந்த ஜூலை மாதம் தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்தப் படம் நாளை (16ம் தேதி) மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.