அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
'பூவே உனக்காக' தொடரில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ராதிகா ப்ரீத்தி. இதன் மூலம் தமிழில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இந்த தொடரின் பாதியிலேயே ராதிகா ப்ரீத்தி திடீரென சீரியலை விட்டு வெளியேறினார். இந்நிலையில், அவர் மீண்டும் அதே டிவியிலேயே அக்கா தங்கை செண்டிமெண்டை மையமாக கொண்ட புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகியிருந்தார். இதில், அக்கா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை நிவிஷாவும், தங்கையாக ராதிகா ப்ரீத்தியும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர். சில தினங்களுக்கு முன் இந்த சீரியலின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
ஆனால், தற்போது அந்த தொடரிலிருந்து ராதிக ப்ரீத்தி விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சின்னத்திரை வட்டாரங்களில் சில செய்திகள் கசிந்துள்ளது. அதன்படி, முதலில் சீரியலின் கதாநாயகி ராதிகா ப்ரீத்தி தான் என சொல்லி அவரை கமிட் செய்துள்ளனர். ஆனால், சூட்டிங்கின் போது நிவிஷாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக ராதிகா ப்ரீத்தி சீரியலை விட்டு விலகிவிட்டார். மேலும், இந்த சீரியலுக்கு ஹீரோவை கமிட் செய்யாமலேயே சூட்டிங்கிற்கும் சென்றுள்ளனர். ஹீரோ கிடைக்காததால் தொடங்கிய ஒருவாரத்திலேயே சூட்டிங்கும் நின்றுவிட்டது
சீரியலை விட்டு விலகியதை உறுதிப்படுத்திய ராதிகா ப்ரீத்தியும், 'பூஜை போட்டு நான்கு மாதங்கள் ஆகியும் சீரியல் சூட்டிங் தொடங்கவில்லை. இரண்டு நாட்கள் மட்டும் தான் சூட்டிங் போனேன். எனக்கு சினிமா மற்றும் வெப்தொடர்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எனவே, டிவி தொடரை விட்டு விலகிவிட்டேன்' என்று கூறியுள்ளார்.