பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு |
சின்னத்திரை நடிகையான நீபா திறமையான நடன கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. திருமணத்திற்கு பின் சில நாட்கள் ஊடக வெளிச்சத்துக்கு இடைவெளி விட்டிருந்த நீபா தற்போது சீரியல்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மறுபடியும் பரதநாட்டியம், வெஸ்டர்ன் நடனத்திலும் கலக்கி வருகிறார். இதன் மூலம் பழைய பிட்னஸூக்கு திரும்பியுள்ள நீபா, முன்னைவிட இப்போது நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பிரபல கொரியோகிராபரான அசார் என்பவருடன் சேர்ந்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தின் குத்துப்பாடலான 'டிப்பம் டிப்பம்' பாடலுக்கு பரதநாட்டிய அசைவுகளை போட்டு அசத்தியுள்ளார். மிகவும் வேகமாக சுழன்று ஆடும் நீபா மற்றும் அசாரின் நடனம் தற்போது பலரது கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.