ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சீரியல் நடிகை மகாலட்சுமியும், சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக சீரியல் நடிகர் ஈஸ்வருக்கும், அவரது மனைவி ஜெயஸ்ரீக்கும் இடையில் பிரச்னை வருவதற்கு காரணமே மகாலட்சுமி தான் என கூறப்பட்டது. அப்போதே பெரும் விமர்சனத்துக்கு ஆளானார் மகாலட்சுமி.
இந்நிலையில் மகாலட்சுமி தற்போது ரவீந்தரை திருமணம் செய்ய காரணம் அவரிடம் இருக்கும் பணம் மட்டுமே என சிலர் தரைக்குறைவாக அவரை விமர்சித்து வருகின்றனர். மேலும், இவர்கள் திருமணத்தை கிண்டலடிப்பது போல் பல மீம்ஸ்களும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் மகாலட்சுமிக்கு ஆதரவாக காஜல் பசுபதி சோஷியல் மீடியாவில் பேசி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், 'அது எப்படிங்க, நயன்தாரா விக்னேஷ் சிவனை கட்டிக்கிட்டாலும் நயன்தாரா மேல தான் தப்பு. மகாலட்சுமி - ரவீந்தரை கட்டிக்கிட்டாலும் மகாலட்சுமி தான் தப்பு. என்ன ஒரு ஆம்பள புத்தில' என சமூகத்தின் மோசமான பார்வையை கேள்வி கேட்டு சூடு கொடுத்துள்ளார்.
காஜலை போலவே தற்போது பலரும் மகாலட்சுமி - ரவீந்தரின் வாழ்க்கை அவர்களது தனிப்பட்ட விருப்பம் அதில் தேவையற்ற கருத்துகளை கூற வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர்.